சிவமொக்கா நவ, 28
எடியூரப்பா ஆய்வு சிவமொக்காவில் விமான நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த விமான நிலைய பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, விமான நிலைய பணிகள் நடக்கும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் பாராளுமன்ற உறுப்பினரும் ராகவேந்திரா இருந்தார். சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் விமான நிலையத்தை திறந்து வைப்பார் என அவர் கூறினார்.