புதுச்சேரி நவ, 28
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளி பாதாள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிந்து வந்தது.
இதையடுத்து, அனிபால் கென்னடி சட்ட மன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், அப்பகுதியில் ஆய்வு செய்து, ஆண்டுக்கு 2 முறை முழுமையாக நவீன எந்திரம் மூலம் தூர்வார வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அதன்படி வம்பா–கீரப் பாளையம் திப்புராய பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பாதாள வடிகால்களை நவீன எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பார்வையிட்டு பணிகளை தூரிப்படுத்தினார்.
இதில் தொகுதி செயலாளர் சக்திவேல் அவைத் தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல் உடனிருந்தனர்.