கரூர் நவ, 28
கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அரசியலமைப்பு தினம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறையையும் பேணி பாதுகாக்க வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மேற்படி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குனர் எஸ்விஆர் கிருஷ்ணன், பொது மேலாளர்கள் நாகராஜன், கலைச்செல்வன் மற்றும் துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தலைமையில் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.