கரூர் நவ, 26
கரூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவளையே சென்ற வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது, வேப்பம்பாளையத்தில், வந்த ஒரு ஜீப்பை வழிமறித்து சோதனையிட்டனர்.
இதில் அந்த அரசால் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த, நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த, லோகநாதன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய, அதே ஊரை சேர்ந்த, சரவணன், என்பவரை தேடி வருகின்றனர்.