தருமபுரி நவ, 28
தருமபுரி தி.மு.க. சார்பில் நூலஅள்ளி கிராமத்தில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
மேலும் நூல அள்ளி கிராமத்திற்கு 10 லட்சம் மதிப்புள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.