தொப்பூர் நவ, 26
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட சோமனஹள்ளி ஊராட்சி கோரப்பள்ளி கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கால்நடைகளை சிறப்பாக பராமரிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான பராமரிப்பு முறைகளையும் எடுத்துரைக்கப்பட்டது. கண்காட்சிகள் அமைக்கப்பட்டு கால்நடைகளின் நலம் மற்றும் பராமரிப்பு குறித்தும் விளக்கப்பட்டது.
மேலும் அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான சிகிச்சைகள், மலடு நீக்கம், சினை ஆய்வு பரிசோதனை, சினை ஊசி செலுத்துதல், குடற்புழு நீக்கம் செய்தல், தாது உப்பு கலவை வழங்குதல், தீவன பராமரிப்பு முறைகள் மற்றும் அசோலா பாசி வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து கால்நடைகளுக்கும் தோல் நோய் தடுப்பூசி செலுத்துதல், மலடு நீக்க சிகிச்சை மற்றும் இளம் சினையறிதல் போன்ற பணிகள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் கருவியைக் கொண்டு மாடுகளுக்கு ஒரு மாதத்திலேயே சினை அறிதல் மற்றும் நோய் அறிதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட 3 பசு மாடுகள் மற்றும் 5 கன்றுகளுக்கு ஊக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவர் கண்ணதாசன், சோமனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் ராஜா, கால்நடை உதவி மருத்துவர் தசரதன், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர், செயற்கை முறை கருவூட்டாளர்கள் கலந்து கொண்டனர்.