திருப்பூர் நவ, 28
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் வட மாநிலத்தவர் ஏராளமானோர் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாகவும் இதனால் விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று முதலே குழந்தைகள் நல வாரிய உத்தரவின் அடிப்படையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போரை தேடித் தேடி கைது செய்து மகளிர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகவை சேர்ந்த லக்ஷ்மி, ரோசன்பாய் என்ற 2 பெண்கள் மற்றும் 2 கை குழந்தைகளுடன் பிச்சை எடுத்து வந்துள்ளனர். தற்போது இவர்களை கைது செய்து வழக்குபதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.