Spread the love

திருப்பூர் நவ, 28

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் கொங்கு கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் விடுத்த வேண்டுகோளில்,வந்தோரை வாழவைக்கும் நமது திருப்பூரில் பல லட்சம் பேர் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு பிரதான சாலையாக இருப்பது திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் சாலை தான். அவர்களின் வாகனங்களுக்கு இடையூறு இல்லாதவாறு திருப்பூர் மங்கலம் சாலையிலிருந்து காங்கேயம் சாலையில் மெயின் ரோட்டில் செல்லாமல் நொய்யல் நதி அருகே அழகாக தார் சாலை போடப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தை முழுமையாக வரவேற்பதாகவும், அதேபோல திருப்பூர் பிச்சம்பாளையம் அருகே இருக்கும் நல்லாறு ஓரமாக சாலை அமைத்து கோயம்புத்தூரில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் நல்லாறு ஓரமாக சாலை போட்டால் திருமுருகன்பூண்டி மற்றும் அவிநாசி வரை இந்த நல்லாறு இடவசதியோடு இருப்பதால் தார் சாலை போடப்பட்டால் ஆக்கிரமிப்பும் அகற்றி விடலாம் மக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்திருப்பூர் கோவையில் இருந்து வரும் வாகனங்களின் வாகன நெருக்கடி இல்லாதவாறு பயணிக்கலாம் என்று கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பாகவும் நிறுவன தலைவர் கொங்கு நாட்டின் காவலர் ஐயா பெஸ்ட் ராமசாமி சார்பாகவும் கேட்டுக் கொள்வதாக கோரிக்கை விடுத்துள்ளார்.

A.மருதமுத்து. செய்தியாளர். திருப்பூர் செய்திப் பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *