Spread the love

திருப்பூர் நவ, 27

தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் 2022-23 ஆம் ஆண்டில் 50 ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது. இத்திட்டம் தொடா்பாக www.application.tahdco.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *