திருப்பூர் நவ, 28
திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டில் துப்புரவு தொழிலாளர்களை குப்பை அல்லும் வாகனத்தில் ஏற்று செல்லும் அவல நிலை நிலவுகிறது. அது மட்டும் இன்றி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்வதால் அவர்களுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் துப்புரவு தொழிலாளர்களின் நலன் கருதி அவர்கள் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்கியும், உயிருக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழ் புலிகள் கட்சி மாநகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இது தொடருமானால் துப்புரவு தொழிலாளர்களுக்காக தமிழ் புலிகள் கட்சி போராட்டம் களம் காணும் என்று தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கனகசபாபதி தனது கண்டனத்தை தெரிவித்தார்.
A.மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.