புதுடெல்லி நவ, 27
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ பிஎஸ்எல்வி 54 என்ற ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் ஓசன் சாட் 03 என்ற புவி சேர்க்கை கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. இந்நிலையில் 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.