ஆந்திரா நவ, 27
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் நான்கு கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்று மட்டும் 60,157 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 31,445 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.