புதுச்சேரி நவ, 26
உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அம்பேத்கர்நகர், ரோடியர்பேட், அங்கன்நாயக்கன்தோப்பு, வாணரப்பேட்டை, தமிழ்தாய் நகர், தாமரை நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்ததின் பேரில் தற்போது பொட்டானிக்கல்கார்டன், தாமரை நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது.
இப்பணிகள் தாமதமாக நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கென்னடி சட்ட மன்ற உறுப்பினர் நிலத்தடி நீர் ஆணையர் துறை செயலாளர் குமாரை சந்தித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க விரைவாக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.