புதுச்சேரி நவ, 25
இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் புதுவை பொது கணக்கு குழு தலைவரான சட்ட மன்ற உறுப்பினர் ரமேஷ் முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், முதுநிலை கணக்காய்வு தலைவர் வர்ஷினி அருண் காவல் தலைமை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.