காசி நவ, 25
இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள 60 முதல் 70 வயதுடைய 200 பேரை தமிழக அரசு காசிக்கு ஆன்மீகப் பயணம் அழைத்து செல்கிறது. தமிழ்நாட்டின் 20 மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் வீதம் 200 பேருக்கான மொத்த செலவு 50 லட்சத்தை இந்து சமய அறநிலையத்துறையை ஏற்கிறது. ராமேஸ்வரம் கோவிலில் இருந்து காசி வரை இப்பயணம் இருக்கும். விரும்புவர்கள் டிசம்பர் 15க்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.