திருவாரூர் நவ, 27
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள ஐடிபிசிஆர் சோதனை மையத்தையும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், அண்மையில் திறக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவரிடம் மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பான நேசக்கரம் சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் பால கிருஷ்ணன், மிட்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ரெங்கையன், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி வே ல்முருகன், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சந்தோஷ், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், சிரில் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இருதய நோய் டாக்டர் நியமிக்க வேண்டும், 24 மணி நேரமும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும். எம்.ஆர். ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும், மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வே ண்டும். லேப்ராஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க வேண்டும், பவர் லாண்டரி வசதி ஏற்படுத்த வேண்டும்,என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டன.
கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.