செங்கல்பட்டு நவ, 26
வண்டலூரை அடுத்த வேடமங்கலத்தில் புறகாவல் நிலையம் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதன் மூலம் அவ்விடங்களின் கட்டுப்பாடு காவல் துறையின் கண்காணிப்பில் இருக்கும்.
இதில் ஊராட்சி தலைவர் கல்யாணிரவி, திருப்போரூர் ஒன்றிய குழு தி.மு.க. தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சம்பத்குமார், மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் கஜேந்திரன், காவல் துணை ஆணையர் ஜோஷ்தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.