சென்னை நவ, 25
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆன பின்பும் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ரேஷன் அட்டை வைத்திருந்து வங்கி கணக்கில்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2023 பொங்கலுக்கே இந்த திட்டம் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.