சென்னை நவ, 24
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. ஆனால் 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த மூன்று வாரமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மேலும் புதிய வழிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது.