சென்னை நவ, 22
தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், நவம்பர் 24ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் 75 வீராங்கனைகளுக்கு ஆறு கோடி மதிப்பில் பரிசு பொருட்களை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கௌரவிக்க உள்ளதாக கூறினார்.