ராணிப்பேட்டை நவ, 24
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தக்கான்குளம் அருகே நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி தலைமை தாங்கினார்.
இந் நிகழ்ச்சியில் சோளிங்கர் அரசு மருத்துவமனை எச்.ஐ.வி. ஆலோசகர் சித்ரகலா கலந்துகொண்டு எய்ட்ஸ் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், எய்ட்ஸ் பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறை, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருவில் உள்ள குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்ட நபரை சக மனிதனாக பார்க்க வேண்டும், பாலியல் நோய் குறித்தும், பாதுகாப்பான உடலுறவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பாடல், தப்பாட்டம், நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் துறைசார்ந்த பணியா ளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.