ராணிப்பேட்டை நவ, 27
ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் புதுத்தெருவில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் அவர்களது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த 6 சவரன் நகை, ரூ.14,000 ஆயிரம் ரூபாய் எரிந்து சேதமானது.
இது குறித்து சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் நகை, பணத்தை திருடிவிட்டு வீட்டிற்கு தீ வைத்துவிட்டு கும்பல் தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்கு தீ வைத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.