ராணிப்பேட்டை நவ, 22
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான இலவச நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்திடும் வாகனத்தினை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவர் மணிமேகலை, துணை இயக்குநர் மருத்துவர் மணிமாறன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரகுராமன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.