கடலூர் நவ, 24
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர்.
இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது தனியார் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பதவி இறக்கம் உள்ளிட்ட5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகே 75 பெண்கள் உள்பட 300 தனியார் அலுவலர்கள் 1 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.