கடலூர் நவ, 22
டிசம்பர் 6 ம்தேதி கார்த்தீகை தீபம் கொண்டாடப்படவுள்ளது. கார்த்தீகை தீபத்தின் போது பொதுமக்கள் தங்களது வீடு, கடைகள் மற்றும் கோவில் உள்ளிட்டவற்றில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவார்கள்.இதனை கருத்தில் கொண்டு குமாரமங்கலத்தை சேர்ந்த மண்டபாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அகல் விளக்குகள் தயாாிக்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.