மயிலாடுதுறை நவ, 23
கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கன மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூபாய்.1000 ரூபாய் வழங்க 16கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழியில் 99,518 தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது.