மயிலாடுதுறை நவ, 22
கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் இந்த கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் ஆண்டுதோறும் எத்தனை முறை வெள்ளபெருக்கு ஏற்பட்டாலும், அப்போது எல்லாம் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அனைத்து அத்தியாவசிய உதவிகளும் அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது புயல் பாதுகாப்பு மையம் இந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் 7 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அனைத்து குடும்பத்தினரும் 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களுக்கும் 2 புயல் வெள்ளப் பாதுகாப்பு மையம் கட்டித் தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ணிச்சந்திரன், பலராமன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களில் புயல் பாதுகாப்பு மையம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.