Spread the love

தேனி நவ, 22

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைப்பதற்கு மானியத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,8 விவசாயிகளுக்கு ரூ.3,33,750/- தளவாடப் பொருட்கள் வாங்குதற்கான ஆணைகளையும் என மொத்தம் 13பயனாளிகளுக்கு ரூ.13,33,750/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வின் போது பட்டு வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் கணபதி பட்டு வளர்ச்சி துறை அலுவலர்கள், ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *