மேட்டூர் நவ, 22
சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட சின்ன அரங்கனூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரக் கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் நேற்று மேட்டூர் சதாசிவம் சட்ட மன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்தார். இதனையடுத்து அவர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் சதாசிவம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பா.ம.க வடக்கு ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகர் ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, ஒன்றிய மாணவர் அணி தலைவர் செம்மனூர் பிரகாஷ், கொள்கை விளக்க அணி தலைவர் மோகன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.