கோத்தகிரி நவ, 22
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் துணை-ஆய்வாளர் சேகர் தலைமையில் குஞ்சப்பனை பகுதி பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.