நாகர்கோவில் நவ, 22
புதுடெல்லியில் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி 40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்று கூடினர். சூழலியல் மாற்றங்கள் அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைதலால் மீன்வளம் குறைதல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் குரல் கொடுக் கும் வகையிலும் மீனவ மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அன்று முதல் ஆண்டுதோறும் நவம்பர் ஞ தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழா கொண்டாட்டமாக உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. உலக மீனவர் தினத்தை குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மீனவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான மீனவர் தினவிழா கொண்டாட்டம் முட்டம் கடற்கரை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கினார். இவ்விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.