ஆந்திரா நவ, 22
நடிகையும் ஆந்திரா நகர தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். 2020ல் கொரோனாவால் தாய் தந்தையை இழந்த திருப்பதியை சேர்ந்த புஷ்பகுமாரி என்ற பெண்ணை ரோஜா தத்தெடுத்தார்.
தற்போது 12-ம் வகுப்பு முடித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அந்த மாணவி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அதற்காக மாணவியை அழைத்து பாராட்டியுள்ள அவர் மாணவியின் கல்லூரி செலவு அனைத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார்.