கேரளா நவ, 21
கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் தரிசனம் செய்திருந்தார்.