புதுடெல்லி நவ, 20
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாக ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது குஜராத் தேர்தல் பின்னணியில் அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் இவர் கனரக தொழிற்சாலை செயலாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.