புதுடெல்லி நவ, 23
ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் காப்பீட்டு திட்டங்களை எல்ஐசி திரும்பப் பெற்றுள்ளது. 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டங்களுக்கான ப்ரீமியம் மிகக்குறைவாக இருப்பதால் மறு காப்பீடு செய்யும் நிறுவனங்கள் இதே தொகையில் இத்திட்டங்களை ஏற்க மறுத்துவிட்டன. எனவே புதிய பிரீமிய தொகையை கணக்கிடும் வரை அவற்றை திரும்ப பெறுவதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட இந்த பாலிசிகள் தொடரும் என அறிவித்துள்ளது.