திருச்சி நவ, 20
திருச்சி மாநகரில் சில இடங்களில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாநகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திருச்சி வரகனேரி மீன் மார்க்கெட் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக காந்தி மார்க்கெட் காவல் துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து 3 பேர் போதை மாத்திரைகளை விற்றுக் கொண்டு இருந்ததை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதை அடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.