ஈரோடு நவ, 20
மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரங்களை கொண்டு சாலையோரத்தில் பள்ளம் பறித்து சாலை விரிவாக்க பணிகளை தொடங்கினர். ஆனால் சாலை விரிவாக்க பணிகள் மெத்தனமாக நடை பெறுவதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் கஸ்பாபேட்டை பேருந்து நிறுத்தம் பகுதி முக்கிய நால்ரோடு சந்திப்பு சாலையாக இருப்பதாலும், ஈரோடு- காங்கேயம் பிரதான சாலையாக உள்ளது.
அப்பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் போக்குவரத்து இடையூறு அதிக அளவில் உள்ளது. தவிர சாலைகளை கடந்து செல்ல பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி ன்றனர். விபத்து அபாயம் அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து இடையூறு தவிர்க்கவும், விபத்து அபாயம் இல்லாமல் இருக்கவும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.