சேலம் நவ, 20
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பொம்மலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகவதி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவிசங்கர், சத்தியக்குமாரி, ஷபிராபானு, வட்டார கல்வி அலுவலர் வித்யா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தாகுமாரி சரவணன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புகழ் விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.