சேலம் நவ, 18
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில் மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் அமலா, வட்டார மேற்பார்வையாளர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் தேர்நிலையம், அண்ணாசிலை, பஸ் நிலையம் வழியாக சென்று கைலாசநாதர் கோவில் அருகில் நிறைவு பெற்றது.