வெல்லிங்டன் நவ, 18
இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெல்லிங்டன்னில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது மிகவும் சுவாரசியமான விஷயம் பாண்டியா அந்த சவாலை திறம்பட எதிர்கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.