சேலம் நவ, 16
நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தாட்கோ தலைவர் மதிவாணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவஹர், ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக்குனர் ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, ஆட்சியர்கள் கார்மேகம், ஸ்ரேயா சிங் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் காவல் தலைமை கண்காணிப்பாளர் ஜெயராம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.