புதுக்கோட்டை நவ, 16
ஆலங்குடி அரசு மருத்துவமனையி்ல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் அருண்குமார், ஜோதிராஜன், லிபர்த்தி செவிலியர்கள் வேலுமணி, ஜான்,செல்வாம்பிகை,காயத்திரி,ஆய்வக நுட்புநர்கள், லெட்சுமிபிரபா, பூபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாமில் ரத்த அழுத்தம், உடல்பருமன், சரக்கரை அளவு, ரத்த வகை, ரத்த சோகை, உயரம், எடை , இசிஜி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.