Spread the love

காஞ்சிபுரம் நவ, 15

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக 100 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பலத்த மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 2131 கன அடியாக குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் 1000 கன அடியில் இருந்து 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ள ளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2830 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.90 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர். பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *