காஞ்சிபுரம் நவ, 13
காஞ்சிபுரம் நோக்கி அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பாலத்தில் சாலை பகுதியில் அதிக அளவு பள்ளங்கள் ஏற்படுவதாகும், அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதாகும். புகாரின் அடிப்படையில் அதனை நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது சரி செய்தும் வந்தனர். விரிசல் ஏற்பட்டதுடன், பல இடங்களில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
இ்ந்த நிலையில் தற்போது 2 தூண்களின் இணைப்பு பகுதியில் பெரும் விரிசல் ஏற்பட்டு இரும்பு கம்பி அனைத்தும் ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. தற்போது பாலத்தின் மையத்தில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்வதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் நேரில் சென்று மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.