விருதுநகர் நவ, 13
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், இளைஞரணி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பந்தல்குடி சாகுல் ஹமீது, அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.