சேலம் நவ, 6
சேலம் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26 ம்தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மணி உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.