சேலம் நவ, 4
சேலம் மாவட்டத்தில் வருகிற 17 ம் தேதி நள்ளிரவு வரை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை காவல்துறையின் அனுமதியின்றி நடத்துவதற்கு தடைவிதித்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் காவல்துறையின் அனுமதி பெற 5 நாட்கள் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.