அடிலெய்டு நவ, 6
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இறுதிப்போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.