தேனி அக், 28
தேனி மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் வருகை புரிந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக தேனி பங்களா மேடு அருகே உள்ள ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மாணவர் விடுதலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் இந்த ஆய்வின் போது மாணவர்களின் நூலகத்தையும் சமையல் செய்முறைகள் பற்றியும் மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள காய்கறி தோட்டத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.