தேனி அக், 26
அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, பாலன்நகர் மற்றும் தெற்கு புதுதெரு ஆகிய பகுதிகளில் வேளாண் விளைபொருள் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.